முதலிரவில் பிளேட் போட்ட கணவர்! | Ottrancheithi
Home / க்ரைம் / முதலிரவில் பிளேட் போட்ட கணவர்!

முதலிரவில் பிளேட் போட்ட கணவர்!

andiraa

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் கங்காதார நல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்த இளம்பெண் சைலஜா. இவர் எம் பி பி எஸ் படித்துள்ளார். இவருக்கு ராஜேஷ் என்பவருடன் நேற்று முன்தினம் காலை ஒரு விநாயகர் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. ராஜேஷ் கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார் இவர் மேதரங்கபள்ளியை சேர்ந்தவர்.

நேற்று முன்தினம் இரவு முதலிரவுக்கு பெண் வீட்டில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். முதலிரவு அறையில் ராஜேஷ் காத்திருக்க உள்ளே சென்ற சைலஜா சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்துள்ளார்..காரணம் சொல்லாமல் அழுதபடி இருந்த சைலஜாவை உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

உள்ளே சென்ற சைலஜாவின் வாயில் துணியை வைத்து அடைத்த ராஜேஷ் அவருடைய பிறப்புறுப்பு, மார்பகம் என உடலில் பல்வேறு இடங்களில் பிளைடால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த சைலஜா அறையை விட்டு ஓடி வந்து மயங்கி விழுந்துள்ளார்..

andra girl

உடனடியாக சைலஜாவின் பெற்றோர்கள் சைலஜாவை சித்தூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை நடைபெறுகிறது. இந்தக். கொடூர செயலை செய்த மாப்பிள்ளையை அடித்து உதைத்த உறவினர்கள் ஜி.டி. நல்லூர் காவல் நிலையத்தில் போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர். சைலஜா மேற்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சைலஜாவின் பெற்றோர் இந்த திருமணத்துக்காக ரூ 60 லட்சம் செலவு செய்துள்ளனர். தனது மகளின் வாழ்கையை சீரழித்த ராஜேஷ் மீது கடும் நடுவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.. நல்ல முறையில் பழகி வந்த ராஜேஷ் திடிரென எதற்காக இவ்வாறான ஒரு சைக்கோ நடவடிக்கையில் ஈடு பட்டார் என யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top