லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 15 படகுகள்!

tamilnadu-fishing-boat-11

ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் சுமார் 1500 பேர் மாயமானதாக வந்த திடுக்கிடும் தகவலை அடுத்து மீனவர்களை மீட்க இந்திய கடற்படையும், ஹெலிகாப்டரில் இந்திய ராணுவமும் தேடி வந்தனர். இவர்களுடைய தீவிர முயற்சியால் நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டாலும் மீதியுள்ள மீனவர்கள் குறித்த அச்சம் எழுந்தது.
oki2

இந்த நிலையில் நடுக்கடலில் மாயமான தமிழக, கேரள மீனவர்கள் 952 பேர், 68 படகுகளில் மகாராஷ்டிரா மாநில கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மீனவர்களின் குடும்பங்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் லட்சத்தீவில் 15 படகுகளுடன் கரை ஒதுங்கிய 173 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் இவர்கள் அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் லட்சத்தீவு மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response