ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி தனது தாயையும் கொன்று தலைமறைவு…!

 

சென்னை அடுத்த மாங்காட்டில் சிறுமி ஹாசினியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளி தஷ்வந்த், குன்றத்தூரில் உள்ள வீட்டில் அவரது தாய் சரளா வை கொலை செய்து விட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

மாங்காடு, சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த், தனது தாயின் தலையில் கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவு. தஷ்வந்த், ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .

WhatsApp-Image-2017-12-02-at-7.28.26-PM

குண்டர் சட்டத்தில் வெளியே வந்த தஷ்வந்த், இன்று குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ ராம் சாலை, சம்மந்தம் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான் தாய் சரளா, மற்றும் அப்பா சேகர் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று சேகர் வேலைக்கு சென்றுள்ளார்.

இதனிடயே தஷ்வந்த் வேலையில்லாமல் இருக்கவே, அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான். இன்று வீட்டில் தனது அம்மா சரளா மட்டும் இருக்கும் நிலையில் மீண்டும் பணம்கேட்டுள்ளான், பணம் தர மறுக்கவே இரும்பு கம்பியால் சரளாவை தாக்கியதில் அவர் அங்கயே இறந்துள்ளார், இதில் அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டும் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துசென்று, வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடியுள்ளான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலிசார் பூட்டை உடைத்து உடலை கைப்பற்றி விசாரனை. நடத்திவருகின்றனர்.

Leave a Response