கோர விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!

c222038dfb15b985fb02a9fc5b45100a

 

திண்டுக்கல்லில் லாரியும், காரும் வேகமாக மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (42). இவர் நிதி நிறுவன அதிபராக இருக்கிறார். இவருடைய மனைவி சந்திரா (35).

தங்கவேலின் தங்கை ஜோதிமணி (39), சந்திராவின் தங்கை கோகிலா (25), அவருடைய தாயார் பொம்முத்தாய் (55) ஆகியோருடன் ஒரு காரில் தங்கவேல் தம்பதியினர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துகொண்டு, நேற்று காலையில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தனர். காரை தங்கவேல் ஓட்டி வந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது தங்கவேல் ஓட்டி வந்த காரும், எதிரே வந்த லாரியும் வேகமாக மோதிக் கொண்டன. இதில் கார் சல்லி சல்லியாக நொறுங்கியது.

விபத்தை ஏற்படுத்திய லாரி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். இடிபாடுகளில் சிக்கி தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் காவலாளர்கள் படுகாயமடைந்த நால்வரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வழியிலேயே பொம்முத்தாய், கோகிலா, ஜோதிமணி ஆகியோர் இறந்தனர். சந்திரா, கோயம்புத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Response