காரசார அரசியல் வசனங்களோடு வெளியானது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர்…

737d5be4-5c4e-4845-8023-fc715f02f201

 

கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ‘நானும் ரவுடி தான்’ ப்ளாக்பஸ்டருக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தில், சூர்யா,கார்த்திக், கீர்த்தி சுரேஷ், செந்தில், கலையரசன்,ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்களின் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையக்கிறார். ஏற்கனவே ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ எனும் பாடல் வெளியாகி ஹிட்டான நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டீசரில் அரசியல் சம்பந்தமான காரசார வசனங்கள் இடம் பெற்றிருப்பதால் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

 

Leave a Response