தீபிகா படுகோனே தலைக்கு விலை நிர்ணயித்த பாஜக தலைவர் பதவி ராஜினாமா!

chrcjpadmavathi

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் ஆகியோரின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவேன் என சூரஜ் பால் அறிவித்தார்.

suraj-pal-amu

இந்த அறிவிப்பு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சூரஜ் பாலின் அறிவிப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை என அக்கட்சி அறிவித்தது.

மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மாநில பாஜக அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் சூரஜ் பால் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் சுபாஷ் பரலாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கட்சியில் சாதாரணத் தொண்டனாக தொடருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response