ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக காலியிறுதிக்கு முன்னேற்றம்!

92403f3ad056df7d64b4d4f637225aa8

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டின் 83 ஆண்டுகால வரலாற்றில், கேரள கிரிக்கெட் அணி முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி, 1934 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

இதில் காலிறுதியில் விளையாட உள்ள 8 அணிகளில், கேரளாவும் இடம் பெற்றுள்ளது. காலிறுதிக்கு கேரள அணி முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது. பி பிரிவில் இருந்து நடப்புச் சாம்பியன் குஜராத் 34 புள்ளிகளுடனும், கேரளா 31 புள்ளிகளுடனும், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சி பிரிவில் மும்பை அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள நிலையில், துவக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த ஆந்திராவை பின்தள்ளி மத்தியப் பிரதேசம் கால் இறுதிக்கு முன்னேறியது. இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, 1955 சீசனுக்குப் பிறகு, லீக் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல், போட்டியில் இருந்து விலகியது. மொத்தம் 6 லீக் போட்டிகளில் தமிழக அணி ஒன்றில் தோல்வியடைந்தது, 5 போட்டியை டிரா செய்தது.

டி பிரிவில் மேற்கு வங்கம் மற்றும் விதர்பா அணிகளும், ஏ பிரிவில் கர்நாடகா மற்றும் டெல்லி அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளன.

டிசம்பர் 7ல் துவங்கும் காலிறுதி ஆட்டங்களில் குஜராத் – பெங்கால், டெல்லி – மத்தியப் பிரதேசம், கேரளா – விதர்பா, கர்நாடகா – மும்பை அணிகள் மோத உள்ளன.

Leave a Response