சென்னையில் 3 பறக்கும் சாலைகள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

mempalam

தமிழகத்துக்கான நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், துறைமுகங்கள், நீர் மேலாண்மை திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் கே.பழனிசாமி, மத்திய கப்பல், நிதித் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் நிதின் கட்கரி கூறியதாவது:

nithn

தமிழகத்துக்கான நெடுஞ்சாலை, துறைமுகங்கள், மேம்பாலங்கள், நீர் மேலாண்மை, மழைநீர் வடிகால்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர், அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினோம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தாம்பரம் – வண்டலூர் இடையே ரூ.22 கோடியிலும், வண்டலூர் – கூடுவாஞ்சேரி இடையே ரூ.50 கோடியிலும் சாலைகள் மேம்படுத்தப்படும். தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரூ.2,250 கோடியிலும், பூந்தமல்லி – மதுரவாயல் இடையே ரூ.1,500 கோடியிலும், திருவள்ளூரில் ரூ.1,000 கோடியிலும் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும்.

road21

ரூ.20 ஆயிரம் கோடியில் சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை அமைக்கப்படும். ரூ.4 ஆயிரம் கோடியில் திருச்சி – சிதம்பரம், ரூ. 6 ஆயிரம் கோடியில் விழுப்புரம் – நாகை விரைவுச் சாலைகள் அமைக்கப்படும். பாரத்மாலா திட்டத்தின்கீழ் நாகை – ராமநாதபுரம் – தூத்துக்குடி வரை 355 கி.மீ., வெள்ளக்கோவில் – ஈரோடு – சங்ககிரி வரை 71 கி.மீ. சாலைகள் அமைக் கப்படும்.

சாலைகளை மேம்படுத்த மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும். தமிழகத்தில் 1,300 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும். விபத்து நடக்கும் இடங்கள் என 61 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு ரூ.2,300 கோடியில் விபத்து தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடியில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மதுரை, கோவை, சேலத்தில் விமான நிலையங்களில் உள்ளதுபோல நவீன வசதிகளுடன் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 3 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழக துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். 350 ஏக்கரில் எண்ணூர், 800 ஏக்கரில் தூத்துக்குடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். பூம்புகார் மீன்பிடி துறைமுகம் ரூ.148 கோடியில் மேம்படுத்தப்படும்.

மீனவர்கள் பிரச்சினை

நீண்ட கடல் பகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நதிநீர் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. நதிகள் இணைப்புதான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும். கோதாவரியில் இருந்து 3 ஆயிரம் டிஎம்சி நீர் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண, கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலிக்கும். இது தொடர் பாக ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களை சந்தித்துப் பேச இருக்கி றேன்.

road221

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும். அடுத்த 3 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப் படும்.

சேதுசமுத்திர திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய பிரச்சினைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மத்திய அரசு முடிவெடுக்கும்.

இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

Leave a Response