வெளியானது அதிகார அறிவிப்பு..!களைகட்டிய  ராயப்பேட்டை அலுவலகம்..

3a57398270bc4f65dc3b89617053292a (1)

இரட்டை இலை சின்னம்  இபிஎஸ் ஒபிஎஸ் அணிக்கு  ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்  ஆணையம் அதிகாரபூர்வமாக  அறிவித்து உள்ளது

இதனை  தொடர்ந்து  அதிமுக தொண்டர்கள்  உற்சாகத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு,தினகரன் அணிக்கும் ஒபிஎஸ் அணிக்கும் இடையே இரட்டை இலை சின்னம்  பெறுவதில் கடும் போட்டி  நிலவி வந்ததால்,கடந்த  மார்ச் மாதம் 22 ஆம் தேதி இரட்டை  இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

பின்னர் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.நீண்ட நாட்களாக நடந்து வந்த பெரும் இழுப்பறிக்குபின், இன்று இரட்டை இலை சின்னம் யாருக்கு என ஒரு முடிவுக்கு வந்தது.

1e5d238d9414aa8cba31120deb0e6c97

இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சட்டப்படி சொந்தம் என தொடர்ந்து சொல்லி  வந்த  தினகரன் அணி ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

எடப்பாடிக்கே சொந்தம் 

கட்சிக்கொடி,கட்சி பெயர், அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை இபிஎஸ்-ஒபிஎஸ் அணி இனி பயன்படுத்த எந்த  தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதிலிருந்து அதிமுக என்ற கட்சி அதிகாரபூர்வமாக எடப்பாடிக்கே சொந்தமானது….

இதனை கொண்டாடும்  விதமாக  எடப்பாடி கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இதற்காக  தற்போது பெரும்பாலான  தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி,  பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு ஸ்வீட் கொடுத்ததும் கொண்டாடி வருகின்றனர்.

b0ca67fc879534df0178f17e185eea91

Leave a Response