கர்நாடக மாநிலத்தில் மதுவிலக்கை கொண்டுவர முடியாது: முதல் மந்திரி திட்டவட்டம்

61

கர்நாடகாவில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டுமானால் நாடு தழுவிய அளவில் பூரண மதுவிலக்கு கொள்கையை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபையில் இன்று மாநில அரசின் மது விற்பனை சட்டம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரவி மற்றும் கலால் துறை மந்திரி திம்மைய்யா இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

ரவியின் வாதத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஜகதிஷ் ஷெட்டார், மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற மாநில அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்காக டீக்கடைகளிலும் மது விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

 

201606071204197693_Karnataka-MP-election-rs-100-crore-bargaining-CM-against_SECVPF

அப்போது, கலால் துறை மந்திரி திம்மைய்யா ஆதரவாக இடைமறித்துப் பேசிய முதல் மந்திரி சித்தராமைய்யா பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு வெட்கமோ, கலாசாரமோ கிடையாது என்று குற்றம்சாட்டினார். நீங்கள் அரசியல் விளையாட்டுக்கு தயார் என்றால் உங்களை எதிர்கொள்ள நாங்களும் தயார் என்று அவர் சவால் விட்டார்.

பூரண மதுவிலக்கு கொள்கையை அறிவித்த பல மாநில அரசுகள் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கி வரும் நிலையில் இங்கு மதுவிலக்கை சாத்தியப்படுத்த முடியாது. மதுவிலக்கை அறிவித்தால் கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் ஊழலுக்கு வழிவகுப்பதுடன் மாநில அரசின் வருமானத்திலும் பாதிப்பை உண்டாக்கி விடும்.
பூரண மதுவிலக்கு என்பது நாடு தழுவிய அளவிலான கொள்கை முடிவாக அமைய வேண்டும். தயவு செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நீங்கள் கூறி நாடு தழுவிய அளவில் பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்டு வாருங்கள் என சித்தராமைய்யா பதிலடி தந்தார்.

Leave a Response