சர்வதேச நீதிமன்ற நீதிபதிக்கு – பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் பாராட்டு

c6d428fb100347b47f091a91e30919e5

நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக(ஐ.சி.ஜே.) இந்தியர் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தி ஹேக்:

நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு நடந்த தேர்தலில் இந்தியா சார்பில் தல்வீர் பண்டாரி மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டார், அவருக்கு எதிராக இங்கிலாந்து சார்பில் கிறிஸ்டோபர் கிரீன்வுட் போட்டியிட்டார்.

வேட்பாளர் வாபஸ்:

ஆனால், கடைசி நேரத்தில் இங்கிலாந்த அரசு தனது வேட்பாளர் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை திரும்பப்பெற்றது. இதையடுத்து ஐ.நா.வில் உள்ள 193 உறுப்பினர்களில் 193 உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தியாவின் சார்பில் நிறுத்தப்பட்ட தல்வீர் பண்டாரி வெற்றி பெற்றார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இங்கிலாந்து வேட்பாளர் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டுக்கு போதுமான ஆதரவு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்ட இங்கிலாந்து அரசு கடைசி நேரத்தில் தனது வேட்பாளரை திரும்பப்பெற்றுக்கொண்டது.

70 ஆண்டுகளில்:

கடந்த 70 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக,சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக பதவில் இல்லாதது இதுதான் முதல்முறையாகும். அதுமட்டுமல்லாமல் ஐ.நா.வின் பாதுகாப்புகவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக இருக்கும் இங்கிலாந்து முதல் முறையாக நிரந்திரமில்லாத நாட்டிடம் தோற்றுள்ளது.அதுமட்டுமல்லாமல், சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஒரு நாடு மற்றொரு உறுப்புநாட்டு பிரதிநிதியிடம் தோற்றுள்ளது.

201611061607564043_concern-about-the-safety-and-wellbeing-of-the-Hindus-in_SECVPF

இந்தியருக்கு 183 வாக்குகள்

மொத்தம் 12 சுற்று வாக்கெடுப்பில், 11 சுற்றுகள் முடிந்திருந்த நிலையில், 12 சுற்று வாக்கெடுப்பின்போது, இங்கிலாந்து அரசு தனது வேட்பாளரை திரும்பப்ெபறுவதாகஅறிவித்தது. மொத்தம் உள்ள 193 வாக்குகளில் இந்தியர் தன்வீர் பண்டாரி 183 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றார். இந்தியர் பண்டாரி ஐ.நா. உறுப்பு நாடுகள் வாக்குகளையும், பாதுகாப்புகவுன்சில் வாக்குகளையும் முழுவதையும் பெற்றார்.

மோடி பாராட்டு:

இதையடுத்து 2-வது முறையாக நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்ட தன்வீர் பண்டாரிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “ சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியர் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டது, மிகப் பெருமைக்குரிய விஷயம். மத்திய வெளியுறவுத்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இந்தியருக்கு வாக்களித்த ஐ.நா. சபை உறுப்பினர்கள், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ்:

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் , “ வந்தேமாதரம், சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியர் வெற்றி பெற்றுள்ளார். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Response