பணத்திற்காக 5 பேர் கொண்ட கூலிப்படை வைத்து கொலை- போலீஸில் சிக்கிய மனைவி!

murder-crime

சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு,42. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்தார். அதன் பின் தர்மபுரியில் வசித்து வந்தார். அப்போது, நிர்மலா,23 என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவரை கவியரசு இரண்டாவதாக திருமணம் செய்டு கொண்டார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார் கவியரசு.

அதன் பின் வயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு, நிர்மலாவிற்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பலமுறை நிர்மலா எடுத்துக்கூறியும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே, இதுபற்றி தனது முன்னாள் காதலன் அபினேஷ்,27 என்பவரிடம் நிர்மலா அழுது புலம்பியுள்ளார். மேலும், கவியரசுவை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுமாறு கூறிய அவர், அதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.

5 பேர் கொண்ட கூலிப்படை அமைத்த அபினேஷ் இரு வாரங்களுக்கு முன்பு கவியரசுவை கொலை செய்து தர்மபுரி அருகே குண்டலப்பட்டி-மல்லிக்குட்டை செல்லும் சாலையோரத்தில் குழி தோண்டி உடலை புதைத்து விட்டார். அத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்தனர் நிர்மலாவும் அபினேசும்.

 

relationship

திடீர் திருப்பமாக தனது மகனை காணவில்லை என கவியரசுவின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் கவியரசுவின் செல்போன் நிர்மலாவிடம் இருப்பது தெரிந்தது. அதில் இருந்து அவர் அபினேஷூடன் தொடர்ந்து பேசி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, நிர்மலா மற்றும் அபினேஷுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் முன்னுக்குப்பின் பதில் அளித்தனர். இதனையடுத்து அபினேஷை தனியாக விசாரணை செய்தனர்.

அப்போது நிர்மலாவுக்கு கவியரசு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால், நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து, உடலை புதைத்ததாகவும், அதற்கு தேவையான பண உதவியை, நிர்மலா செய்ததாகவும் அபினேஷ் ஒப்புக்கொண்டார்.

அபினேஷ் கொடுத்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகள் இருவரையும் பிடித்த போலீசார், நல்லாண்டி ஹள்ளியில் புதைக்கப்பட்ட கவியரசுவின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே அரசு மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Response