11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்ற திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது!

titanic

உலகின் மிகப்பெரிய கப்பலாகக் கருத்தப்பட்ட டைட்டானிக், 1912ம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்த போது, உடைந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் கடந்தாலும், அந்த கப்பலின் மீதுள்ள பிரியமும், சுவாரசியமும் இன்னும் ரசிகர்களிடையே குறைய வில்லை.

இதற்காகவே டைட்டானிக் கதை திரைப்படமாக 1997ம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் வெளியாகி உலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. நிஜக்கதை என்பதால் மிகப் பிரபலமடைந்தது. இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார். இதில் லியோனார்டோ டிகாப்ரியோ கதாநாயகனாகவும், கேட் வின்ஸ்லெட் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படம் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது. இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்’ படத்துடன் அதே 11 விருதுகள் பெற்று சமன் செய்தது டைட்டானிக். அதே போல அந்தக் காலகட்டத்தில் உலகில் அதிக வசூல் என்கிற சாதனையையும் செய்தது.

1-2

தற்போது இப்படம் டால்மி அட்மாஸ் தொழில் நுட்பத்துடன் டிசம்பர் 1ம் தேதி மீண்டும் வெளியாக இருக்கிறது. இதற்கான டிரைலரையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். டால்மி அட்மாஸ் ஒளியுடன் இப்படத்தை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response