கொலை, கொள்ளையை அழிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – பட விமர்சனம்:

thiran

கார்த்தி கதாநாயகனாகவும், ராகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும், வில்லனாக அபிமன்யு சிங், மற்றும் போஸ் வெங்கட், மனேபாலா, சத்யன், ரோஹித் பத்தக், நாரே ஸ்ரீனிவாஸ்  ஆகியோர் நடித்திருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை வினோத் அவர்கள் இயக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் படம் தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப் படத்தில் காதல், காமெடி, மட்டும் இல்லாமல் ஆக்சன், விறுவிறுப்பையும் வைத்து இருக்கிறார் இயக்குனர்.

thiran1

நமது நாயகன் கார்த்தி போலீஸ் பணிக்கான பயிற்சியில் முதலிடம் பிடித்து தமிழகம் முழுவதும் சுற்றி வரும் நாயகனாக படத்தில் வளம் வருகிறார். அதற்குள் கார்த்தி ரகுல் ப்ரீத் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொள்ளகிறார். கடைசியாக சென்னைக்கு ஆந்திராக்கும் நடுவில் ஒரு ஊரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவருடன் சேர்ந்து போஸ் வெங்கடும் போலீஸ் அதிகாரியாக உள்ளார்.

அபிமன்யு சிங்க்  இப் படத்தில் திருடனாக வருகிறார். அவர்கள்  ராஜஸ்தானில் லாரிகள் முலம் சென்னை மட்டுமின்றி பல நகரங்களில் கொள்ளையடித்து வருவார்கள். அவர்கள் பணம், நகை கொள்ளையடித்தால் பரவாயில்லை கொடூரமாக கொலை செய்து கொள்ளையடிக்கும் கும்பல், அவர்கள் இருபது பேர் கொண்ட குழுவாக பணியாற்றுவார்கள்.

Karthi-Dheeran-Adhigaram-Ondru

சென்னையில் கார்த்தி இருக்கும் பகுதியில் அபிமன்யு சிங்க்  கொள்ளை அடிக்க நம் நாயகன் இந்த வழக்குக்குள் நிழைகிறார். மேல் அதிகாரி உதவியுடன் களமிறங்குகிறார் கார்த்தி. ஆனால் சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் தவிக்கிறார் கார்த்தி. உயர் அதிகாரிகளின் அலச்சியத்தால் மீண்டும் கொள்ளையடிக்க களமிறங்குகிறார் அபிமன்யு சிங்க். அதன் பிறகு தான் கதையின் மிக பெரிய திருப்பு முனையாக  அமையும்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தமிழகம் மற்றும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தேடும் பணியில் இறங்குகிறார் நாயகன். அப்போது அவருக்கும் அவருடன் வரும் அதிகாரிகளுக்கும் நடைபெறும் துக்கம் சந்தோஷம் அதை மீறி வரும் தடைகளை தாண்டி எப்படி வில்லனின் இருபது பேர் கொண்ட குழுவை கைது செய்கிறாரா இல்லையா என்பது தான் மீதி கதை.

ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் அற்புதமாக காட்சிகளை வடிவமைத்த சண்டை பயிற்சியாளர் திலிப்  சுப்புராயன் அவர்களையும் அந்த காட்சிகளை படமாக்கிய ஒளிப்பதிவாளர்  சத்யன் சூர்யன்  கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.  சண்டை காட்சிகளில் நடித்துள்ள அனைவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள் சொல்லியே ஆக வேண்டும். காரணம் அந்த காட்சிகளில் கண்டிப்பாக அவர்கள் அனைவரும் காயம்பட்டிருப்பார்கள்.

Theeran-Adhigaaram-Ondru

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் அருமை, குறிப்பாக ஒரு ஹிந்தி பாடல் மற்றும் காட்சிப்படுத்திய விதம் இளைஞர்களுக்கு கிளுகிளுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதரற்கு இப் படத்தில் ஒரு காட்சியையும், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஏற்படும் துன்பமும் இப் படத்தில் சிறப்பாக வெளிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த மீதி கதையில் தான் இயக்குனர் பல விருவிருப்புக்களை வைத்து காவல்துறையினர் படும் கஷ்டத்தை இப் படத்தில் வெளிகாட்டியுள்ளார்.

Leave a Response