ராஜீவ் கொலை வழக்கு- தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு பரோல் வழங்க!

rajiv

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். இதில், பேரறிவாளனின் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு மற்றும் அவருக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக அவருக்கு ஒரு மாதம் தமிழக அரசு பரோல் வழங்கியது. பின்னர், அந்த பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

 

nalini

இந்தநிலையில், நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று பதில் மனுத்தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஆறு மாத காலம் பரோல் வழங்க முடியாது. ஆறு மாத காலம் பரோல் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது’ என்று உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

Leave a Response