ஆறுகளை பாதுகாக்க தவறியதற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு….!

SC

ஆறுகளை பாதுகாக்காத காரணத்திற்காக மகாராஷ்டிர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேவில் பாயும் உல்ஹாஸ் மற்றும் வல்துனி உள்ளிட்ட ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதாலும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் மிகப்பெரியளவில் மாசடைந்துள்ளன. இந்த ஆறுகளில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்ய சொல்லி அரசிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

இதனை எதிர்த்து 2012ம் ஆண்டு வனசக்தி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.96 கோடி அபராதம் விதிக்கப்பட்டது

இதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, மும்பை உயர்நீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் வனசக்தி அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

இதைத்தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது

மேலும், மாநில தலைமைச் செயலாளர் ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் நிறுவனங்களை இழுத்து மூட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Response