ஆளுநரின் ஆலோசனை கூட்டம்: வலுக்கும் அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனம் !

201711151233131216_3_governorbanwarilal._L_styvpf

ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று ஜி ராமகிருஷ்னன் தெரிவித்துள்ளார். அதிகார வரம்பை தமிழக ஆளுநர் மீறுவதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மேலும் புதுச்சேரி போன்ற நிலை தமிழகத்துக்கு ஏற்பட கூடாது என்று அவர் கூறினார். எடப்பாடி அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிப்பது போல் உள்ளது என்று தெரிவித்தார்.

முத்தரசன் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் மத்திய பாஜக ஆட்சி நடக்கிறது என்பதற்கு ஆளுநரின் ஆலோசனை உதாரணம் என்று கூறியுள்ளார். எடப்பாடி தலைமையிலான அரசு இதை அனுமதிக்க கூடாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று எடப்பாடி கருதுகிறார் என்று குற்றம் சாட்டினார். தன்மானமோ சுயகவுரவமோ எடப்பாடி அரசுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

துரைமுருகன் கண்டனம்.

மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளுடன் அரசு கூட்டம் நடத்தவில்லை எனவே ஆளுநர் அந்த வேலையை செய்கிறார் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஈவிகேஎஸ் கருத்து.

தமிழகத்தின் உண்மையான முதல்வராக ஆளுநர் தான் செயல்படுகிறார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

15cbkk01governer 2

கு. ராமகிருஷ்ணன் கண்டனம்.

ஆளுநரின் ஆலோசனை மாநில உரிமைகளை மீறும் செயல் என்று கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் துரைசாமி கருத்து.

முதல்வர் சொல்வதன் அடிப்படையில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று வழக்கறிஞர் துரைசாமி கூறினார். அதிகாரிகளும் அரசின் அனுமதி பெற்றே ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார். மாவட்ட அதிகாரிகள் ஆளுநரை பார்த்தது சட்டப்படி சரியல்ல என்று அவர் கூறினார்.

பழ.கருப்பையா விமர்சனம்.

புதுச்சேரி, டெல்லியை போல தமிழகத்திலும் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக பாஜகவினர் திரும்பியுள்ளனர் என்று கூறினார். முக்கியமான மாற்றத்தை தமிழ்நாட்டில் இந்த சந்திப்பு ஏற்படுத்த போகிறது என்று தெரிவித்தார். மேலும் எடப்பாடி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாக பழ.கருப்பையா கருத்து தெரிவித்தார்.

Leave a Response