ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு – மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

perarivalan-14-1510649636

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளன் மனுவுக்கு 2 வாரத்தில் அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். 25 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்துள்ளார். அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன்.

Arputhammal

 

உடல்நலம் குன்றியுள்ள தந்தையை கவனித்துக்கொள்ள 2 மாத காலம் பரோலில் வந்து சென்றார் பேரறிவாளன். இந்த நிலையில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டி தமக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளாக தாம் சிறையில் உள்ள நிலையில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். விசாரணையின் போது அதிகாரிகள் தனது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை. எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணைகள் குளறுபடியோடு இருப்பதாகவும், ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு பற்றி விசாரிக்கபடாதது ஏன் என்றும் கேட்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response