முதல் மனைவியின் குழந்தையை கொன்ற இரண்டாவது மனைவி- பரபரப்பு வாக்கு மூலம்! | Ottrancheithi
Home / பொது / முதல் மனைவியின் குழந்தையை கொன்ற இரண்டாவது மனைவி- பரபரப்பு வாக்கு மூலம்!

முதல் மனைவியின் குழந்தையை கொன்ற இரண்டாவது மனைவி- பரபரப்பு வாக்கு மூலம்!

Philippines-

சென்னை குன்றத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் என்ற நபர் ஜெயந்தி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கௌசிகா என்ற பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையில் நடந்த சண்டை காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இதையடுத்து கௌசிகா, ஜெயந்தியுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

 தனியாக இருந்த தர்மலிங்கம் கடந்த சில மாதங்களாக ஆஷா என்று பெண்ணுடன் சேர்ந்து வாழ தொடங்கி இருக்கிறார். அதே சமயத்தில் தர்மலிங்கத்தின் குழந்தை கௌசிகா வராம் ஒருநாள் வந்து அப்பாவுடன் தங்கி இருக்கிறார். தர்மலிங்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் முறைப்படி முதல் குழந்தையான கௌசிகாவுக்கு மட்டுமே செல்லும். இந்த விஷயம் தெரிந்த ஆஷா அடிக்கடி தர்மலிங்கத்துடன் சண்டையிட்டு இருக்கிறார்.
subclinical
இதையடுத்து ஆஷா சொத்துக்களை எப்படியாவது அபகரிக்க திட்டமிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த கௌசிகாவை ஆஷா மிகவும் கொடுமைபடுத்தினார். மேலும் அவளை பாக்கெட்டில் தண்ணீர் நிரம்பி அதில் முக்கி கொலை செய்து இருக்கிறார். மேலும் இந்த ஆஷா இந்த கொலையை செய்த போது கர்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
murder
அலுவலகத்திற்கு சென்ற தர்மலிங்கம் மாலை ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பினார். அதுவரை இறந்த குழந்தையின் உடல் அங்கேயே இருந்து இருக்கிறது. அதை பார்த்த தர்மலிங்கம் போலீசுக்கு புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் ஆஷா ”தர்மலிங்கத்தின் சொத்துக்கள் எனக்கு வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என வெளிப்படையாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top