சென்னை கனமழையில் இருந்து தப்பியது- வானிலை ஆய்வு மையம்!

vanilai23

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

பெருமழை தரும் என எதிர்பார்த்த மேகக்கூட்டங்கள் கடலிலேயே மழையாக பொழிந்ததால் சென்னை கனமழையில் இருந்து தப்பியது.

இந்நிலையில் நேற்று முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களிலும், உட்புற மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

“நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வட திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவுகிறது.

chennai-rain

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகி உள்ளது

Leave a Response