அடியாட்களை ஏவுகிறாரா சார்பு நீதிபதி?

marrige1

வேலூர் மாவட்ட சார்பு நீதிபதியின் மகள் காதலித்து கலப்பு  திருமணம்  செய்து கொண்டார்.  தன் தந்தையினால் தனக்கும் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால் தன் தந்தையிடம் இருந்தது எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி காஞ்சிபுரம் மாவட்ட கண்கானிப்பளாருக்கு சார்பு நீதிபதியின் மகள் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில்:-

வேலூர் மாவட்டத்தில் சார்பு நீதிபதியாக இருப்பவர் அசீம் இவரது மகள் தமீம் இவர் கடந்த வாரம் பெல்காந்தி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆத்திரம் அடைந்த  அசீம் தன் மகளையும் அவரது கணவரையும் மற்றும் அவர் குடும்பத்தினரையும் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

 

wedding-rings-600

எனது தந்தையினால் எங்களின் அனைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவகுதற்கு முன்பு எங்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்கானிப்பளாரிடம் சார்பு நீதிபதியின் மகள் கோரிக்கை மனு அளித்தார்.

Leave a Response