தெலுங்கு நடிகர் ஸ்டூடியோவில் தீ விபத்து- உயிர் சேதம் இல்லை!

naka

தெலுங்கின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஐதராபாத்தில் அண்ணபூர்னா ஸ்டூடியோ என்ற பெயரில் சொந்தமாக சினிமா ஸ்டூடியோ ஒன்று உள்ளது. இங்கு பல சினிமா மற்றம் சின்னத்திரை சீரியல்கள், நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு நடந்து வந்தது.படப்பிடிப்புக்காக பல அரங்குகள் லட்சக் கணக்கில் செலவு செய்து போடப்பட்டிருந்தது. அப்படியான ஒரு அரங்கில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தொடர்ந்து தீ வேகமாக பரவியது. nagarjuna

 

இதனால் படப்பிடிப்பு பணியில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். முன்னணி நடிகர், நடிகைகள் உடனடியே வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற ஷெட்டுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. சேத மதிப்பு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. என்றாலும் லட்சக்கணக்கில் சேதம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

 

Leave a Response