தொடரும் ஒரு தலை காதல் கொலை!

fi1

வேளச்சேரியில்  இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆகாஷ் என்பவர் வேளச்சேரியை சேர்ந்த  இந்துஜா என்ற பெண்ணை ஒருதலையாக  காதலித்து வந்துள்ளார்.  இவரது காதலை இந்துஜா ஏற்க மறுத்து விட்டார் என்று தெரிகிறது.

அந்த விரக்தியில் இருந்த ஆகாஷ் நேற்றிரவு வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அந்த பெண் அவரது தாய் மற்றும் அவரது சகோதரி  மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

இதில் இந்துஜா, அவரது தாயார், சகோதரி ஆகியோர் காயமடைந்தனர். இந்துஜா சிகிச்சை பலனின்றி கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்துஜாவின் தாயார், சகோதரி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஒருதலைக்காதல் விரக்தியால் காதலிக்கும் பெண்ணின் வீட்டை பெட்ரோல் ஊற்றி காதலன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Leave a Response