பிரபல சினிமா நடிகர் நட்சத்திர ஹோட்டல் தகராறு! | Ottrancheithi
Home / அரசியல் / பிரபல சினிமா நடிகர் நட்சத்திர ஹோட்டல் தகராறு!

பிரபல சினிமா நடிகர் நட்சத்திர ஹோட்டல் தகராறு!

karunas1

நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து முக்குலத்தோர் புலிப்படை சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து திருவாடணை தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் எம்எல்ஏவாக நுழைந்தார்.

அதன் பின்னர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா அணியுடம் கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த கருணாஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் மூன்று எம்எல்ஏக்களுடன் தனித்து செயல்பட்ட கருணாஸ் எடப்பாடி பழனிச்சாமி அணி தினகரனுக்கு எதிராக செயல்பட்டபோது தினகரன் அணிக்கு மீண்டும் தனது ஆதரவை வழங்கினார் கருணாஸ்.

இதனால் ஊடகங்களில் பிரபலமாகவே இருந்தார் கருணாஸ். இவரது செயல்பாடுகளை மக்கள் கவணித்தே வந்தனர். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் எம்சிஆர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குடி போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தன்னை கருணாஸின் நண்பர்கள் தாக்கியதாக காவல்துறையிடம் பரணிதரன் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top