சசிகலா பரோலில் வந்தபோது 600 சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டதா?

 

sasi_new_15517

சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில்கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 600 சொத்துக்கள் சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டவை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் 6ம் தேதி பெங்களூர் சிறையிலிருந்து பரோலில் வந்த சசிகலா ரகசியமாக சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரப் பதிவு செய்ததும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. சசிகலா மற்றும் இளவரசி சேர்மனாக இருக்கும் நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் ஜெயா டிவி உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களை ஏற்கனவே இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியா மற்றும் மகன் விவேக் ஆகியோர் பெயர்களில் மாற்றி அமைத்துள்ளனர். மேலும் பரோலில் வெளியே வந்த 5 நாளில் சசிகலா 600க்கும் மேற்பட்ட பத்திரங்களை இரவும் பகலும் மாறி மாறி பெயர் மாற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

dinakaran

அவசரமாக பத்திரப் பதிவு செய்ய 6 மூத்த பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகளை சென்னையிலுள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்துள்ளனர். அவர்களை அங்கு 3 நாட்களாக தங்க வைத்து பத்திரப் பதிவு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்துள்ளனர். இதற்காக 30 க்கும் மேற்பட்ட நம்பகமான ஆட்களை பணியில் அமர்த்தி இரவு பகலாக பல்வேறு ஆவணங்களை மாற்றி அமைத்துள்ளனர். இந்த ஆவணங்களில் பெரும்பாலும் சசிகலாவின் குடும்பத்தில் அவர்களுக்கு நெருக்கமான, சசிகலாவின் பின்னால் இருக்கும் தொழிலதிபர்களுக்கு பெயர் மாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது. சசிகலா அவசரமாக அழைத்ததின் பெயரில் 150 நபர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடமும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

sasi_vivek_final_15180

இதில் சிலருக்கு சொத்தை மீண்டும் கொடுப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. அவர்களிடம் ‘‘வருமான வரித்துறையினர் சோதனை நடத்த இருக்கிறார்கள். அதனால்தான் சொத்து வேறு பெயர்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். இப்போது உங்களிடம் இருக்கும் சொத்துக்களை நீங்களே கவனித்து கொள்ளுங்கள். வெறும் டாக்குமென்ட்கள் மட்டுமே மாறுகிறது. சொத்து எங்கும் போகவில்லை’’ என ஆறுதல் சொல்லி சமாதானம் செய்துள்ளனர். இப்படி சசிகலா சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த 5 நாட்களில் 600க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பல்வேறு நபர்களின் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கடந்த மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான 5 நாட்கள் பத்திரப் பதிவுத்துறையில் நடந்த சொத்து பரிமாற்றங்களின் பட்டியலை கையில் எடுத்துக் கொண்ட வருமான வரித்துறை அதிலுள்ள நபர்களை பட்டியலிட்டு குறிவைத்து விசாரிக்க ஆரம்பித்தது.

201708231346394706_Dhivakaran-Says-We-have-40-MLAs_SECVPF

மத்திய, மாநில உளவுத்துறையில் இதற்காக ரகசியமாக சிலரை நியமித்து பல்வேறு தகவல்களை ஒப்பீடு செய்து சரி செய்து கொண்ட பிறகே சசிகலா மற்றும் நடராஜனுக்கு கீழுள்ள அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளை பொறி வைத்து பிடித்துள்ளது. புதியதாக சிக்கிக் கொண்ட நபர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த வருமான வரித்துறையினர் அவர்களிடம் துருவிதுருவி விசாரணை செய்ததில் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த ஆவணங்கள் அனைத்தும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டவை. சுடச் சுடச் கையெழுத்து போட்ட ஆவணங்களாக இருப்பதை பார்த்த வருமான வரித்துறையினர் ஆடிப்போய் உள்ளனர். மேலும் கைப்பற்றிய ஆவணங்களின் உண்மையான மதிப்பு எவ்வளவு என சரிபார்க்கும் வேலை முடிந்ததும் இந்த மெகா ரெய்டை மிக விரைவில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய தயாராகி வருகிறது வருமான வரித்துறை.

Leave a Response