வேலூரில் ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!

ig
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலை கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று சித்தூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடத்தல் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் நேற்று குடியாத்தம் பகுதியில் மப்டியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்த திருலோகசுந்தர்(39), அன்பு(24) ஆகிய 2 பேர் சிலைக்கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதேபகுதியில் உள்ள நிலத்தில், ஐம்பொன்னால் ஆன விநாயகர், முருகர், அம்மன் சிலைகள் ஆகிய 3 சிலைகளை தோண்டி எடுத்தனர்.
இந்த சிலைகளின் மதிப்பு ரூ.4 கோடி. இவற்றில், விநாயகர் சிலையானது, வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் காணாமல்போனதாகும் என்று பொன்.மாணிக்கவேலிடம் போலீசார் விளக்கினர் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Leave a Response