தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்பதற்காக கொலை செய்யப்பட்டானா? 3ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.

தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் தற்போது அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என கூறப்படுகிறது. மேலும் தேர்வு ஒத்திப்போக வேண்டும் என்பதற்காக கொலை செய்ததாக கூறப்படுகிறது.

08-1510137396-school35-600

 

பள்ளி கழிவறையில் கொலை:

டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர்.போலீசார் அந்த பள்ளியின் சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் பாதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கழிவறையில் இருந்து வெளியே வந்தது தெரிய வந்து இருக்கிறது. மேலும் அந்த வீடியோவில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் அந்த சிறுவனை கொடூரமாக உள்ளே இழுத்து சென்றதும் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து அந்த கண்டெக்டர் கைது செய்யப்பட்டார்.

08-1510137216-pradyumanthakurmurder-studentmurder32

பள்ளி மாணவனும் சம்பந்தம்:

அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த கொலையில் தற்போது புதிய திருப்பம் ஒன்று உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த கொலைக்கு அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவனும் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கொலையில் முக்கிய குற்றவாளி அந்த பஸ் கண்டெக்டர் இல்லை இந்த மாணவன் தான் என கூறப்படுகிறது. இவனுடன் இன்னும் 5 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

காரணம் என்ன?

இந்த கொலைக்கு தற்போது இரண்டுவிதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலை பாலியல் துன்புறுத்தல் காரணமாக முதலில் நடத்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனபட்டது. ஆனால் பள்ளியில் நடக்க இருந்த தேர்வை நிறுத்துவதற்காகவே இந்த கொலை நடந்து இருப்பதாக புதிய காரணம் கூறப்படுகிறது. அந்த மாணவன் இறந்தால் பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என அப்படி செய்ததாக கூறுகிறார்கள்.
இந்த கொலையை செய்வதற்காக அந்த 11ம் வகுப்பு மாணவன் பல நாட்களாக முயற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவன் பள்ளிக்கு தினமும் கத்தி எடுத்து வந்ததாகவும் அவன் நண்பர்கள் வாக்குமூலம் அளித்து இருக்கின்றனர். அவன் மிகவும் முரட்டுத்தனமான பையன் எனவும் சிலர் சிபிஐயிடம் தெரிவித்து இருக்கின்றனர்.

201709082049098183_1_schoolboy._L_styvpf

அந்த மாணவனின் பெற்றோர் மறுப்பு:

இதுகுறித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவனின் பெற்றோர் கூறுகையில் “என் மகனின் உடலில் ஒரு துளி ரத்த கறை இல்லை. அவன் சட்டையிலும் அதற்கான அடையாளம் இல்லை. அதேபோல் அந்த கண்டெக்டரும் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் இப்போது என் மகனை ஏன் கைது செய்து இருக்கிறார்கள் என தெரியவில்லை” என்றனர். மேலும் அவர்கள் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கவும் உள்ளனர்.

Leave a Response