பணமதிப்பிழப்புக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

23131022_880773915415813_385743253603742690_n

மதுரையில் பணமதிப்பிழப்புக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிப் பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளிலும் ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏராளமானோர் வங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

பழையா நோட்டிற்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது.

23032667_880262618800276_1162933563036965322_n

இதன்மூலம் மக்கள் சில்லரை தட்டுப்பாட்டிலும் சிக்கி தவித்தனர். ஆனால் அதன்பிறகு பிரபலங்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின.

மேலும் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி களமிறங்கும் போது குடிமகன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் ஓராண்டு காலம் ஆகியும் இதுவரை அப்பணம் செலுத்தப்படவில்லை. முறையான விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து டிஜிட்டல் முறையையும் மோடி கையில் எடுத்தார்.

இந்த முறைகளினால் கறுப்பு முற்றிலும் ஒழியும் என பாஜக தெரிவித்து வந்தது.

இதைதொடர்ந்து வரும் நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பை அறிவித்த மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி திமுக ஸ்டாலின் தலைமையில் நாளை மதுரை அண்ணாநகரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அண்ணாநகரில் அல்லாமல் வேறு இடத்தில் நடத்தி கொள்ள போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Response