நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில் ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறதா?

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணையும் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, ஏர்செல் நிறுவனத்தை மூட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் 4ஜி சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்செல் நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

yersel

புதிதாக 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்துக்கும் 40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response