வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது நிர்பாய் ஏவுகணை!

 

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய நிர்பாய் ஏவுகணைச் சோதனை இன்று வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நிர்பாய் ஏவுகணை இன்று பகல் 11.20 மணிக்கு ஒடிசா மாநில கடற்கரை அருகே உள்ள சந்திப்பூரிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 300 கிலோ வெடிப் பொருள்கள் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஏவுகணையாகும். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இந்த நிர்பாய் ஏவுகணைச் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

nirbhay_16390

முதன்முறையாக நிர்பாய் ஏவுகணைச் சோதனை 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி நடத்தப்பட்டது. பாதுகாப்பு அபாய காரணங்களால் பாதியிலேயே அந்தச் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி நான்காவது ஓட்டம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், 700 விநாடிகளிலேயே அந்த ஏவுகணை செயல் இழந்தது.

ஆனால் இப்போது, சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை தன்னுடைய ஐந்தாவது முயற்சியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்..

Leave a Response