அரசு அதிகாரிகளிடம் இருத்து திறக்கும் திட்டிவாசல் கதவு- பட விமர்சனம்!

Thittivasal-ik

ஸ்ரீநிவாசராவ் தயாரிப்பில் பிரதாப் முரளி இயக்கத்தில் ஜி.ஸ்ரீவாசன் ஒளிப்பதிவு செய்ய ஜெர்மன் விஜய், ஹரீஸ், சத்தீஷ் இசையில் இரட்டை காதல் ஜோடிகளாக மகேந்திரன்-தனுஷேட்டி மற்றும் வினோத்கின்னி-ஐஸ்வர்யா அவர்களுடன் நாசர், அஜய் ரத்னம், தீரஜ், ஸ்ரீதர், ஆகியேர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் திட்டிவாசல்.

மலை கிராமத்திற்கு அரசாங்கம் பட்டா போட்டுத் தந்த இடத்தை, வனத்துறை அமைச்சர் அபகரிக்கத் திட்டம் போட, அவருக்கு ரேஞ்சர், காவல்துறை அதிகாரி, கலெக்டர் எல்லோரும் உடந்தை. இதை எதிற்கும் கிராம மக்கள் சிலரை புலி அடித்துக் கொன்றதாகவும், சிலர் மீது பொய் வழக்குப் போட்டும் அடக்கி ஒடுக்கி வைக்கப்படுகிறார்கள்.

Thittivasal

சிறைக்கு செல்லும் மலைக்கிராமத்து இளைஞர்களை சுதந்திர எழுச்சி பெறச் செய்கிறார் முற்போக்கு சிந்தனையாளர் அஜய் ரத்னம். அதனால் தன் மலைக்கிராமத்தில் நடந்த கொடுமைகளை விவரித்து எழுதி அதை அனு ஷெட்டியிடம் பத்திரிகை அலுவலகங்களுக்கு கொடுக்கச் சொல்கிறார் மகேந்திரன். ஆனால் யாரும் துணித்து நடவடிக்கை எடுக்க மறுத்ததால் தீக்குளிக்கும் முயற்சியால் உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் அனுஷெட்டி.

இதனால் ஒட்டுமொத்த அனுதாபத்தை பெறும் அனுஷெட்டியை எதிர்கட்சி தலைவர்கள், கலெக்டர் என்று அனைவரும் வந்து பார்பதன் மூலம் மலைக்கிராமத்து மக்களின் போராட்டம் முடிவு பெற்றதா? சிறையிலிருந்து மலைகிராமத்து இளைஞர்;கள் விடுதலை பெற்றார்களா? அமைச்சரின் சதித்திட்டம் வெற்றி பெற்றதா? தீக்குளித்த அனுஷெட்டி என்ன ஆனார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

Leave a Response