அவள்- விமர்சனம்…

siddharth-aval-andrea_640x480_51508743841 (1)

திரைப்படம்- அவள்

நடிகர்கள்- சித்தார்த், ஆண்ட்ரியா ஜெரமியா, அனிஷா, அதுல் குல்கர்னி
இசை- கிரிஷ், ஒளிப்பதிவு- ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, இயக்கம்- மிலிந்த் ராவ்,

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘உதயம் NH4’, ‘ஜிகர்தண்டா’, ‘ஜில் ஜங் ஜக்’ என தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குனர்களின் கதைகளுக்கும் ‘காவியத்தலைவன்’, ‘எனக்குள் ஒருவன்’ போன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் சித்தார்த். மிலிந்த் ராவ் இயக்கத்தில் இவர் நடித்து தயாரித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘அவள்’

இப்படத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசம். அங்கு வந்து குடியேறுகிறார்கள் மூளை அறுவைசிகிச்சை நிபுணராக வரும் சித்தார்த் அவருடைய மனைவியாக ஆண்ட்ரியா நடிதிருகிரார்கள். அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டில் அதுல் குல்கர்னி என்பவரின் குடும்பம் குடியேறுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு அதுல் குல்கர்னியின் மூத்த மகள் அனிஷாவுக்கு விபரீதமாக பல சம்பவங்கள் நடக்கின்றன. மனநோயாகக் கருதி சிகிச்சையளிக்க முயற்சிக்கிறார் சித்தார்த். ஆனால், அவளது உடலில் பேய் இருப்பது தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டிலிருந்தே அதுல் குல்கர்னி குடும்பத்தினர் வெளியேறிவிட நினைத்தாலும், முடியவில்லை. பேயோட்டவந்த பாதிரியார் அடிபட்டு கோமா நிலைக்குப் போகிறார். அந்த வீட்டில் இருப்பது யாருடைய பேய், ஏன் அதுல் குல்கர்னியின் குடும்பத்தைக் குறிவைக்கிறது என்பது மீதிக் கதை.

இந்தப் படத்தின் பல பகுதிகள் ஹாலிவுட் படமான “தி கான்ஜூரிங்” படத்தை நினைவு கூறுவதாக இருந்தாலும் தமிழில் இப்படி ஒரு படத்தைப் பார்ப்பது புதிதுதான். மலை பிரதேசங்களில் பனிமூட்டம் கொண்ட ப்ளக் அண்ட் ஒயிட்டுடன் படம் துவங்குவதால், இது தமிழுக்கு முற்றிலும் வழக்கமான படமில்லை என்பது மட்டும் அனைவருக்கும் புரிந்து விடும்.

Leave a Response