ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவம்- விழித்திரு பட விமர்சனம்!

Vizhithiru_B
படத்தை மீரா கதிரவன் இயக்கி அவரே தயாரித்துள்ளார். இப் படத்தில் கதாநாயகக்களாக விதார்த் மற்றும் கிருஷ்ணா, நடித்துள்ளார்கள். அவர்களுடன்  வெங்கட் பிரபு, தன்ஷிகா, எரிகா, தம்பி ராமய்யா ஆகியேர் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளராக  சத்யன் மகாலிங்கமும்  ஒளிப்பதிவாளரக விஜய் மில்டன் இத் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் தான் விழித்திரு படத்தின் கதை.

திருட வந்த வீட்டுக்குள், இருட்டறையில் திருமண கோலத்தில் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கும் தன்ஷிகாவை ஒரு டீல் போட்டுக் காப்பாற்றுகிறார் விதார்த். வெளியில் வந்த பிறகுதான் தெரிகிறது, விதார்த்தை விட பெரிய கேடி தன்ஷிகா என்பது. திருடிய பணத்தில் விதார்த் பங்கு கேட்க, அதைத் தர மறுத்து பையுடன் தன்ஷிகா தப்பிக்கப் பார்க்க, என கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

vizhithiru

ஓட்டு அரசியலுக்காக சாதிக் கலவரத்தைத் தூண்டி, அந்த தடயத்தை வைத்திருக்கும் பத்திரிகையாளரை மிரட்டி கொல்கிறது அதிகார வர்க்கம். அதற்கு சாட்சியாக இருக்கும் டிரைவர் கிருஷ்ணாவையும் கொல்ல போலீஸ் துணையுடன் விரட்டுகிறார்கள். .

வெங்கட் பிரபு என ஒருவர் இருந்தாரே என நீங்கள் கேட்பது புரிகிறது. இவருடைய கேரக்டரும் ஒரு ட்விஸ்ட் தான், இந்நிலையில் அவர் தன் பங்கிற்கு தன் அனுபவமான நடிப்பை காட்டியிருக்கிறார்.

போலீஸிடம் இருந்து தப்பித்து சென்னை நகர் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணா. ஒரு புறம் அவர் போலீஸிடம் சிக்குவாரா மற்றொரு புறம் வெங்கட் பிரபு மகளை கண்டுபிடிகிறார்களா. தன்ஷிகாவும் விதார்த்தும் ஆடும் ஆட்டம் என்பது தான் மீதி கதை.

 

Leave a Response