அருவி வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

201711031913008842_1_aruvi2._L_styvpf

 

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘அருவி’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தயாரிப்பவர் எஸ்.ஆர்.பிரபு. அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருவி’.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் அருவி படம் திரையிடப்பட்டு, விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் சில பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த அவர்கள், படக்குழுவை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.

 

அருவி படத்தை புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருக்கிறார். அதிதி பாலன், லஷ்மி கோபால்சாமி, ஸ்வேதா சேகர் என புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Leave a Response