ஆதார் விவகாரத்தில் அடுத்த சாட்டையை சுழற்றும் மம்தா !

mamata-banerjee-1-759

செல்போனுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்தது. டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அறிவித்தது. இந்த காலக்கெடு தற்போது மார்ச் 31 என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் முடிவை ஒரு மாநில அரசு எப்படி எதிர்க்கலாம்? என சரமாரியாக கேள்வி எழுப்பியது.

கூட்டாட்சி தத்துவத்துக்கு இது எதிரானது எனவும் கருத்து தெரிவித்தது. வேண்டும் என்றால், மம்தா பானர்ஜி தனிநபராக வழக்கு தொடரலாம் என்று கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்றத்தில் தனிநபராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். இதற்கான சட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Leave a Response