தக்காளி, வெங்காயம் விலை குறையும்- மத்திய அமைச்சர் தகவல்!

Bengaluru : Union Minister of Food and Public distribution Ram Vilas Paswan speaks during a press conference in Bengaluru on Monday. PTI Photo by Shailendra Bhojak(PTI6_13_2016_000105A)
சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் காய்கறிகளான வெங்காயம் மற்றும் தக்காளி விலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில், பெரிய வெங்காயம் ரூ. 45க்கும், தக்காளி ரூ. 55க்கும் விற்பனையாகி வருகிறது. பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி அதிகஅளவு சாகுபடி செய்யும் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில்:-

tave

”கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக சாகுபடி பாதிக்கப்பட்டது. அதுபோலவே மஹாராஷ்டிராவில் கால தாமதமாக அறுவை நடந்து வருவதால் வெங்காயம் மற்றும் தக்காளி சந்தைக்கு வருவது தாமதமாகியுள்ளது. வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. பருவகால பாதிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதே. அடுத்த இரு வாரங்களில் நிலைமை சீரடையும், விலை குறைந்து விடும்” எனக் கூறினார்.

Leave a Response