மெர்சல் சென்சார் சர்ச்சைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கொடுத்த மெர்சல்!!

mersal34
இளைய தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகியது.

திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுக்கொண்டிருந்த போது, பா.ஜ.கட்சி GST மற்றும் பணமதிப்பிழப்பு குறித்து விஜய் பேசியுள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு எதிராக ஒரு சில வசனங்கள் இந்த படத்தில் உள்ளதாகவும் கூறி புது பிரச்சனையைக் கிளப்பியது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யவேண்டும் எனக் கூறி வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவை ரத்து செய்வதாகக் கூறி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்தத் தீர்ப்பு குறித்து பேசிய அவர் ஒரு படத்தின் வசனத்தை பொது மக்கள் கண் மூடித் தனமாக நம்புவார்கள் என்று கூறமுடியாது. தவறுகளை சுட்டிக் காட்டுவதும் கருத்து சுதந்திரம் தான். எனவே இந்த மனுவை விசாரணை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.

Leave a Response