டெல்லியில் பயங்கரம்…கணவர், குழந்தை கண் எதிரே மனைவி சுட்டுக்கொலை!

201710260612565867_Woman-shot-dead-in-front-of-husband-son-in-Delhi_SECVPF

டெல்லியில் தொழில் அதிபர் மனைவியை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியின் ரோஹினி பகுதியை சேர்ந்தவர் பங்கஜ் மெக்ரா. தொழில் அதிபர். இவருடைய மனைவி பிரியா மெக்ரா. இவர்களுக்கு 2 வயது மகன் உள்ளான்.தனது காரில் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த பங்கஜ் மெக்ரா நேற்று அதிகாலை வீடு திரும்பினார். இவர்கள் காரில் இருந்து இறங்கிய போது, வீட்டுக்கு அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.இதில் பிரியாவின் உடலை குண்டுகள் துளைத்தன.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, கணவர் பங்கஜ் மெக்ரா மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பங்கஜ் மெக்ரா ஒருவரிடம் கடன் வாங்கி இருந்ததும், அதனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினையில் பங்கஜ் மெக்ராவை கொலை செய்ய முயற்சித்த போது அவரது மனைவி தவறுதலாக கொல்லப்பட்டதும் முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

டெல்லியில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் 5 பேர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிர் இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response