தீபாவளிக்குப்பிறகும் விலைக்குறைய மறுக்கும் அத்தியாவசிய பொருட்கள் !

07_Rice

தீபாவளி முடிந்தும் பிரியாணி அரிசி விலை குறையவில்லை. மாறாக விலை உயர்ந்து வருகிறது. இதே போல அரிசி, புளி, வெல்லம் விலை உயர்ந்துள்ளது. பருப்பு விலை குறைய ெதாடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பாசுமதி அரிசி கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்தது. அதே போல் சமையல் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது. தீபாவளிக்கு பிறகு விலை குறையும் என்று கூறப்பட்டது. ஆனால், தீபாவளி முடிந்து 9 நாட்கள் ஆகியும் பிரியாணி அரிசி விலை குறையவில்லை. மாறாக விலை உயர்ந்து வருகிறது. சமையல் எண்ணெய் மட்டும் சற்று குறைந்துள்ளது. பாசுமதி அரிசி (முதல் ரகம்) கிலோ ரூ.100 லிருந்து ரூ.110, பாசுமதி அரிசி(2ம் ரகம்) ரூ.80லிருந்து ரூ.90, பாசுமதி அரிசி(3ம் ரகம்) ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இதே போல மற்ற அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி அரிசி வருகிறது. இங்கு இருந்து தற்போது வரத்து குறைந்துள்ளது.

பழைய ஸ்டாக் அரிசியும் விற்று தீர்ந்துள்ளது. இதனால், தற்போது அரிசி விலை உயர்ந்து வருகிறது. அதாவது, ரூபாலி அரிசி ரூ.32லிருந்து ரூ.34, அதிசய பொன்னி ரூ.34லிருந்து ரூ.36, டீலக்ஸ் பொன்னி ரூ.36லிருந்து ரூ.38லிருந்து ரூ.38, பாபட்லா ரூ.44லிருந்து ரூ.46, பாபட்லா(2ம் ரகம்) ரூ.38லிருந்து ரூ.40, வெள்ளை பொன்னி ரூ.56லிருந்து ரூ.58, வெள்ளை பொன்னி(2ம் ரகம்) ரூ.52லிருந்து ரூ.54, இட்லி அரிசி ரூ.38லிருந்து ரூ.40, இட்லி அரிசி(2ம் ரகம்) ரூ.36லிருந்து ரூ.38, மாவு பச்சரிசி ரூ.30லிருந்து ரூ.32, பொன்னி பச்சரிசி(புதுசு) ரூ.44லிருந்து ரூ.46, பொன்னி பச்சரிசி(பழையது) ரூ.54லிருந்து ரூ.56, ஆந்திரா ஸ்டீம் அரிசி ரூ.48லிருந்து ரூ.50, கர்நாடகா ஸ்டீம் அரிசி ரூ.50லிருந்து ரூ.52 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை அதிகமான அளவு பெய்ததாலும், வடகிழக்கு பருவமழை தற்ேபாது தொடங்கியுள்ளதாலும் வரும் டிசம்பர், ஜனவரி மாதத்தில் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது. கிலோவுக்கு ரூ.5 வரை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். கர்நாடகாவில் இருந்து வரத்து குறைவால் புளி கிலோ ரூ.120லிருந்து ரூ.150, புளி(2ம் ரகம்) ரூ.100லிருந்து ரூ.120, குண்டு வத்தல் ரூ380லிருந்து ரூ.330, குண்டு வத்தல்(2ம் ரகம்) ரூ.330லிருந்து ரூ.280, நீட்டு வத்தல் ரூ.90லிருந்து ரூ.60 ஆகவும் விலை குறைந்துள்ளது. சேலம் வெல்லம் ரூ.50லிருந்து ரூ.60, வேலூர் வெல்லம் ரூ.70லிருந்து ரூ.80, அச்சு வெல்லம் ரூ.80லிருந்து ரூ.90 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை மட்டும் ரூ.44லிருந்து ரூ.42 ஆக விலை குறைந்துள்ளது.

AAEAAQAAAAAAAAiBAAAAJDk2NmM5ZTY2LThkZTEtNGZkNy1hNjc4LTFjNjcwMjMxM2EwMg

பருப்பு விலை குறைந்தது:

வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்துள்ளது. இதனால் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் பருப்பு விலை குறைய தொடங்கியுள்ளது. துவரம் பருப்பு ரூ.80லிருந்து ரூ.70, துவரம் பருப்பு(2ம் ரகம்) ரூ.70லிருந்து ரூ.60, உளுந்தம் பருப்பு ரூ.90லிருந்து ரூ.80, உளுந்தம் பருப்பு(2ம் ரகம்) ரூ.80லிருந்து ரூ.70, பாசிப்பருப்பு ரூ.80 லிருந்து ரூ.70, கடலைப்பருப்பு ரூ.85லிருந்து ரூ.75 ஆகவும் விலை குறைந்துள்ளது என்று தமிழ் நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்துள்ளார்.

மேலும் சொரூபன் கூறுகையில், பருப்பு விலை டிசம்பர், ஜனவரியில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.20 வரை குறைய வாய்ப்புள்ளது. பாமாயில் 1 லிட்டர் ரூ.65லிருந்து ரூ.62, சன்பிளவர் ஆயில் ரூ.85லிருந்து ரூ.80, சன்பிளவர் ஆயில்(2ம் ரகம்) ரூ.78லிருந்து ரூ.72 ஆகவும் விலை குறைந்துள்ளது. மலை பூண்டு ரூ.150லிருந்து ரூ.120, நாட்டுப்பூண்டு ரூ.140லிருந்து ரூ.110, நாட்டுப்பூண்டு ரூ.100லிருந்து ரூ.70 ஆகவும் விலை குறைந்துள்ளது” என்றார்.

download
முட்டை விலை 411 காசாக நிர்ணயம்:

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டை விலையில் மேலும் 6 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 411 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால், முட்டை விலை உயர்த்தப்பட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கடந்த 13 நாட்களில் முட்டை விலை 24 காசு வரை அதிகரித்துள்ளது.

கொப்பரை விலை தொடந்து ஏறுமுகம்:

மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் 15க்கும் மேற்பட்ட ஊர்களில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது கொப்பரை தேங்காய்களை அருகில் உள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் 272 கொப்பரை தேங்காய் மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. இதில் முதல் ரகம் ஒரு கிலோ ரூ.113க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்தவாரம் அதிக விலைக்கு ஏலம் போனதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response