டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்த ராமதாஸ் கோரிக்கை!

201707291641043827_Ramadoss-Says-Vellore-district-should-be-inseparable-by-3_SECVPF

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவகைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அமிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து மது ஆலைகளும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் பதிவு செய்திருப்பதுடன், உணவுப் பாதுகாப்புத் துறையால் சான்று அளிக்கப்பட்டுள்ளன. எனவே, டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

tasmac_six_hundrerd_14214

மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளை தர ஆய்வுக்கு உட்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான 14 ஆண்டுகளில் ஒருமுறை கூட மது வகைகளின் தரம் குறைத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதது துரதிருஷ்டவசமானது என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார். தரம் குறைந்த மதுவை விற்ற ஒரு கடை மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்துள்ள ராமதாஸ், அதற்கு அந்த மது நிறுவனமே பொறுப்பேற்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முழு மதுவிலக்கு வேண்டுமென்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response