பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாணவர்களுக்கு புதிய வேண்டுகோள்!

sengottaiyan

அதிமுக இரு அணியாக பிரிந்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் ஒபிஎஸ்சுடன் கூட்டணி சேர்ந்தார்.

இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவி எடப்பாடி அணியில் இருந்த செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வி துறையில் பல திட்டங்களை செங்கோட்டையன் கொண்டுவந்தார்.

பத்து, மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண்கள் பாதியாக குறைத்தது, மாணவ மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள், மாணவர்கள் மரம் நட்டால் இலவசமாக 5 மதிப்பெண்கள் போன்றவையும் இதில் அடங்கும்.

இந்நிலையில்,கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

amma

அப்போது பேசிய அவர், இயற்கையின் நிகழ்வில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதை தடுக்க வேண்டுமானால் மாணவர்கள் மட்டுமின்றி அனைவருமே ஆளுக்கொரு மரம் வளர்க்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக அரசின் தற்போதைய முக்கிய திட்டம் மரம் வளர்ப்பதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Response