பழமையான கட்டடங்கள் ஆய்வு செய்து அகற்றப்படும்- அமைச்சர் அறிவிப்பு!

os

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

50 ஆண்டுகால பழமையான கட்டடங்கள் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் அவை இடிக்கப்படும்.

பழமையான கட்டடங்களில் உள்ள அரசு ஊழியர்கள் வெளியேற்றப்படுவர். இடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பருவமழை காலம் முடியும் வரை அலுவலர்கள் யாரும் விடுப்பில் செல்லக் கூடாது. மக்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

buse

பொறையாறில் பேருந்து பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலியான நிலையில் பழைய கட்டடங்கள் இடிப்பு குறித்து அமைச்சர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response