தனியார் மருத்துவமனைக்கு அபராதம்- சேலம் மாநகராட்சியில் அதிரடி! | Ottrancheithi
Home / பொது / தனியார் மருத்துவமனைக்கு அபராதம்- சேலம் மாநகராட்சியில் அதிரடி!

தனியார் மருத்துவமனைக்கு அபராதம்- சேலம் மாநகராட்சியில் அதிரடி!

denku2

டெங்கு என்னும் ஆபத்தான உயிரைக் குடிக்கும் வைரஸ் நோய்க்கு தமிழகத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையே கதி என உள்ளனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசும் டெங்கு புழுக்கள் உருவாக்கும் இடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். டெங்குவால் சேலம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் நடந்தன.

denku1

இந்நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் இன்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் டெங்கு புழுக்களும் , பாம்பும் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதற்காக ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த ஒரு இடத்தில் அபாயகரமான மருத்துவமனை கழிவுகள் அகற்றாமல் இருந்ததற்கு மேலும் ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர். மேலும் சோதனை நடத்த மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.

denku

நோய்க்கு வைத்தியம் செய்யும் மருத்துவமனையே குப்பை மேடாக இருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top