‘சங்கமித்ரா’வில் பாலிவுட் நாயகி!

sangamithra

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘சங்கமித்ரா’ படத்துக்கான ஹீரோயின் தேடுதல் ஒருவழியாக முடிந்தது.

முதலில் ஸ்ருதி ஹாசன் தான் இப்படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் ஆனார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஸ்ருதி இப்படத்திலிருந்து விலகினார்.

shruti-hasan

அடுத்து நயன்தாரா நடிப்பார் என்று பேசப்பட்டது.

தற்போது வெளியான தகவலின் படி ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நாயகி திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

new1

சமீபத்தில் ‘மெர்சல்’ தொடர்பான சர்ச்சையால் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சிக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் ‘சங்கமித்ரா’ படத்தை கை விடப் போவதாக சில தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ‘சங்கமித்ரா’ படத்தின் நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

Leave a Response