இணைய தளத்தில் படம் பார்த்த தலைவருக்கு விஷால் கடும் கண்டனம்!

vishal

ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களை விமர்சித்த மெர்சல் படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, இணையதளத்தில் மெர்சல் படத்தைப் பார்த்ததாக கூறியிருந்தார்.

இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஷால் கூறியுள்ளதாவது:

இணையதளத்தில் திருட்டுத்தனமாக படத்தைப் பார்த்ததாக கட்சிப் பொறுப்பில் இருக்கும் எச். ராஜா பொதுவெளியில் கூறியிருப்பது வேதனை தருகிறது.

wp

திருட்டு விசிடி குற்றத்தை அரசுகள் சட்டப்பூர்வமாக்கிவிட்டன.

உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம்.

h-raja

இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Response