சென்னையில் ஒரு நாள் 2 – விமர்சனம்:

Chennaiyil-oru-naal-2 Ottran Cheithi
நடிகர் சரத்குமார் கதாநாயகனாக நடித்து இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘சென்னையில் ஒரு நாள் 2’. இதில் சுகாசினி மற்றும் முனிஷ்காந்த் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர் நெப்போலியன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கல்பத்தாறு ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ராம்மோகன் தயாரிக்க, புதுகுக இயக்குனர் ஜே.பி.ஆர் இயகியுள்ளார்.

கதையின் கரு: சென்னையில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய சரத்த்குமார், கோயம்பத்துருக்கு இடம் மாற்றலாகி வருகிறார். சரத்குமார் கோயம்பத்தூர் வரும் நேரத்தில் ஒரு கொலை நிகழ போவதாக ஒரு மறைமுக போஸ்டர் வெளியாகிறது. இதை கண்ட காவல் துறையினர் மூத்த அதிகாரியான நெப்போலியன் தலைமையில் ஒரு மீட்டிங் நடத்தப்படுகிறது. அந்த மீடிங்கில் கலந்து கொள்ளும் சரதுகுமாருக்கு இந்த போஸ்டரின் சர்ச்சையை விசாரிக்க உத்திரவிடப்படுகிறது. இந்த போஸ்டரை பற்றி சரத்குமார் விசாரிக்கையில் நடக்கும் நிகழ்வுகள், உண்மையில் கொலைகள் நடிக்கிறதா, இல்லையா என்பது தான் இப்படத்தின் சுவாரசியமுள்ள கதையா அல்லது சொரசொரப்புள்ள கதையா என்பது!

2013’ல் ஷாஹீத் காதர் என்பவர் இயக்கத்தில், ராடான் சினிமாஸ் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘சென்னையில் ஒரு நாள்’. இந்த படத்தின் பெயரை வைத்து ஒரு சொதபலான திரைகதை அமைக்கப்பட்ட படம் தான் இந்த ‘சென்னையில் ஒரு நாள் 2’ திரைப்படம். இப்படம் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கதையை மையமாக வைத்து திரைகதை எழுதி இயக்கப்பட்ட படம் என்பது தான் பெரும் அதிர்ச்சி.

உதாரணத்து சொல்லவேண்டுமானால் இன்றைய நிலையில் ஒரு க்ரைம் நடைபெற்றது என்றால், பொதுமக்கள் அந்த க்ரைம் எவ்வவாறு நடந்திருக்கும் என்பதை பல கோணங்களில் சுளுபமாக யோசிக்கிறார்கள். காரணம், இன்றைய பரிமாண வளர்ச்சியில் சி.சி.டி.வி கேமரா, செல்போன் போன்றவையின் உதவியால் குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க பல வகைகள் இருப்பது பொதுமக்களுக்கு புரிந்துள்ளது. ஆனால் நம்ம இயக்குனருக்கு அது எதுவும் புரியவில்லை என்பது தான் உண்மை. இந்த படத்தில் நடக்கும் குற்றங்களின் பின்னணியை கண்டுபிடிக்க சுளுபமான வழிகள் இருந்தும், அதை கண்டுபிடிக்க ரூம் போட்டு யோசித்துள்ளார்கள் படக்குழுவினர் என்பது தான் இப்படத்தின் தீபாவளி புஸ்வானம். ‘சென்னையில் ஒரு நாள் 2’ என்று படத்துக்கு பெயரை வைத்ததைவிட ‘கோயம்பத்தூரில் ஒரு நாள்’ என ஒரு பொருத்தமான பெயரை இந்த இயக்குனர் வைத்திருக்கலாம். சரத்குமார் நடிப்பில் குறை எதுவும் இல்லை என்றாலும், அவருக்கு வைக்கப்பட்ட சீன்களில் லாஜிக்கில்லை. சரத்குமார் என்ற ஒரு நல்ல நடிகருக்கான திரைகதை சரியாக அமைக்கப்படவில்லை. மொத்தத்தில் சரத்குமாருக்கு இந்த படம் ஒரு சறுக்கலே. சுகாசினி மற்றும் முனிஷ்காந்துக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் பெரியதாக சொல்லும்படி ஒன்றும்மில்லை. நெப்போலியன் எப்போதும் போல் ஒரு காவல்துறை அதிகரி மட்டுமே.

இதற்கும் மேலே இப்படத்தை பற்றி சுவாரசியம் அல்லது சொரசொரப்பு வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக படத்தை தேட்டரில் சென்று பாருங்கள்.

பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் சரத்குமார் & டீம்!!!

Leave a Response