‘மெர்சல்’ விவகாரத்தில் மோடிக்கு ராகுல் கண்டனம்!

8d876d78-ea9a-4e71-ba28-9a7153827f8d

‘மெர்சல்’ விவகாரத்தில், பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி பற்றிய வசனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ’மெர்சல்’ படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘மெர்சல்’ விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர், ”திரைப்படம் என்பது தமிழ் மொழி, கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு. ’மெர்சல்’ விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் தமிழின் பெருமையை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

Leave a Response