நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து முதலிடத்துக்கு முன்னேறுமா இந்தியா? நாளை தொடங்குகிறது முதல் ஒரு நாள் போட்டி.

 

Ind-Vs-Nz

 

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா 3-0 என ஒயிட்வாஷ் செய்தால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக நடந்து வரும் தொடரில், முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக வென்ற தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றி உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து 176 ரன் விளாசிய தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் டி வில்லியர்ஸ், பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். வங்கதேசத்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்தால் தென் ஆப்ரிக்க அணி நம்பர் 1 அந்தஸ்தை மேலும் உறுதி செய்துகொள்ளலாம்.

maxresdefault

அதே சமயம், நியூசிலாந்துக்கு எதிராக நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தினால் மீண்டும் முதலிடத்தை பிடிக்க முடியும். அதே போல, பேட்டிங் தரவரிசையில் டி வில்லியர்ஸ் 879 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கோஹ்லி 877 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். நியூசி. தொடரில் அதிக ரன் குவித்தால் கோஹ்லி மீண்டும் நம்பர் 1 ஆகலாம்.

பந்துவீச்சு தரவரிசையில் பாகிஸ்தானின் ஹசன் அலி (743) முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசி. தொடரில் அசத்தினால் டாப் 10ல் உள்ள இந்திய பவுலர்கள் பூம்ரா (6வது இடம்), அக்சர் பட்டேல் (8வது இடம்) இருவரும் தங்கள் ரேங்க்கை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை, வாங்கடே மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது.

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளின் பட்டியல்,

1

Leave a Response