தொடரும் கரும்பு விவசாயிகள் போராட்டம்; மௌனம் சாதிக்கும் தமிழக அரசு.

Karumbu-21mar2017-chennai

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் அறிவித்த கரும்புக்கான ஆதார விலையை, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், சுமார் ரூ.1,400 கோடியை ஆலை நிர்வாகத்தினர் பாக்கி வைத்துள்ளனர்.

இந்த நிலுவைத்தொகையை கேட்டு, சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தீபாவளிக்கு முன்பாக கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிலுவைத்தொகையில் ரூ.125 கோடி வழங்குவதாகவும், மேற்கொண்டு எதுவும் கேட்க மாட்டோமென விவசாயிகள் ஒப்புதல் அளிக்க வேண்டுமெனவும் தனியார் சர்க்கரை ஆலைகளின் நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இதை கண்டித்தும், நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரியும், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகம் முன்பு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஏற்றி நேற்று போராட்டம் நடத்தினர்.

 

இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,

“தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.1,400 கோடி  நிலுவைத்தொகையை வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது. இதில் ரூ.125 கோடி மட்டும் தருவதாகவும், இனிமேல் நிலுவைத்தொகையை கேட்க மாட்டோம் என கையெழுத்திட வேண்டுமெனவும் கேட்கிறார்கள். முழுத்தொகையும் வழங்க வேண்டும்’’ என்றார்.

Leave a Response