கெட்டவைகளை விலக்கி நல்லவற்றை வரவேற்க வருகிறது தீபாவளி!

ea630ed7b38f1d6d361c5090f44aac15

தீபாவளிப் பண்டிகை களைகட்டத் துவங்கிவிட்டது. புத்தாடைகள் அணிவது, பலகாரங்கள் செய்வது, பட்டாசு வெடிப்பது, பூஜைகள் செய்வது என எண்ணற்ற விஷயங்களுடன் தீபாவளிப்பண்டிகையை கொண்டாடுவோம்.

 

தீபாவளி என்றாலே விளக்கு வைப்பது மற்றும் பட்டாசு வெடிப்பது தான் ஹைலைட் . ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வெடிகளை அறிமுகம் செய்து வர்த்தக சந்தையை நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. தீபாவளி நெருங்குவதற்கு முன்னரே பட்டாசு தயாரிப்பு சூடு பிடிக்கத்துவங்கும். அடுத்தாண்டு தீபாவளி வர்த்தகத்தை மனதில் கொண்டு அப்போது வைரலாக இருக்கும் பெயர்களில் எல்லாம் வித விதமான பட்டாசுகளை வெளியிடுவார்கள்.

 

எல்லா விஷயங்களுக்கு பின்னரும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கும். ஆரம்பக் காலத்திலிருந்தே கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

1024px-Krishna_Narakasura

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை இந்து புராணங்கள் கூறுகின்றன….அவற்றுள் சில

  1. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
  2. கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.
  3. இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
  4. சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

chines crackers

தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நடைமுறை எதனால் வந்தது தெரியுமா? இதற்கு பின்னால் என்னென்ன காரணங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

பட்டாசை முதன் முதலில் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள். பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து ‘பட்டாசு’ கண்டு பிடித்தனர் சீனர்கள்..!

பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் கெட்ட சக்திகள் எல்லாம் விலகி ஓடும் என்று நம்பப்பட்டது. ஆரம்ப காலங்களில் வெடிகள் மட்டுமே வெடிக்கப்பட்டிருந்தது.

பட்டாசு வெடிப்பதினால் உண்டாகும் சத்ததினால் தங்களை நெருங்க வரும் கெட்ட சக்திகள்,ஆவிகளை விரட்ட முடியும் என்று நம்பினர். தீபாவளி தொடர்பாக இப்படி பல நம்பிக்கைகள் உண்டு.

தீபாவளியை பாதுகாப்பாகவும் இனிமையாகவும் கொண்டாட வேண்டும் என்பதே அவசியம். சந்தோஷமாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள்.

 

Leave a Response